முதன்மை ஆய்வாளர்
வேதசகாய குமார் பேராசியர் ஜேசுதாசனின் மாணவர் 1979ல் இவர் எழுதிய தமிழ்ச்சிறுகதை வரலாறு ஒரு விமர்சகராக இவரை அறிமுகம் செய்தது.
எழுபதுக்களின் பிற்பகுதியில் சுந்தரராமசாமி தோற்றுவித்த 'காகங்கள்' இலக்கிய சிந்தனை குழுவில் இணைந்து செயல்பட்டார். இலக்கிய சிற்றிதழ்களில்
தொடர்ந்து இயங்கிவந்துள்ளார். கொல்லிப்பாலை, சொல்புதிது இதழ்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தற்பொழுது மாற்றுவெளி இதழில்
தொடர்ந்து எழுதிவருகிறார். புதுமைப்பித்தன், கால்டுவெல் ஆகியோரைக் குறித்ததான அவருடைய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கன. தமிழ்ச் சிறுகதை வரலாறு,
தற்கால இலக்கியம் வாசகப்பார்வை, புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும், புனைவும் வாசிப்பும் ஆகிய விமர்சன நூல்களையும் எழுதியுள்ளார். திருவனந்தபுரம்
பல்கலைக்கழகக் கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இணை ஆய்வாளர் - முனைவர் சு. இராஜேந்திரன்
திருவனந்தபுரம் பல்கலைக்கழகக்கல்லூரி தமிழ்த்துறையில் இணை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நாட்டார் வழக்காற்றியல்
துறையில் சிறந்த ஆய்வாளர். 'முதுவான் இனப் பழங்குடி மக்கள்', 'மொழியும் பண்பாடும்' ஆகிய நூல்களின் ஆசிரியர்.
|